Wednesday, September 04, 2013
இலங்கை::வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு (புலிகளின் ஒட்டு குழு)
இலங்கை::வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு (புலிகளின் ஒட்டு குழு)
கட்சி வலியுறுத்தியுள்ளது. வட மாகாணசபைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. விரிவான முறையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு, காணி, காவல்துறை, சமூகப் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, நிதிப் பொறுப்பு போன்ற பல்வேறு விடயங்களில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் சுயாட்சி அதிகாரங்களை உருவாக்கக் கூடிய வகையில் பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் இந்த ஆண்டில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கை மீள ஒருங்கிணைத்து சமஷ்டி முறைமையிலான ஆட்சியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.(புலி)கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.



No comments:
Post a Comment