Wednesday, September 11, 2013

வட மாகாண சபை தேர்தல் இராணுவ தலையீடுகள் எதுவுமின்றி நியாயமாகவும் நீதியாகவும் மிக அமைதியான முறையில் நடைபெறும்! பசில் ராஜபக்ஷ!

Wednesday, September 11, 2013
இலங்கை::வட மாகாண சபை தேர்தல் இராணுவ தலையீடுகள் எதுவுமின்றி நியாயமாகவும் நீதியாகவும் மிக அமைதியான முறையில் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ். கிaன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது “வட மாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருப்பதாக” ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், “வட மாகாண சபைத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடு என்பது ஐஸ் கதை போன்றது” என்று கூறி அக்கதையினையும் விளக்கினார்.

ஒரு ஊரில் ஐஸ் மலையொன்று இருந்ததாம். அந்த மலையில் ஒருவர் தங்கியிருந்தார். ஒருமுறை, அதே கிராமத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த மலையில் ஏறினார். மலையில் தங்கிருந் தவரின் வீட்டிற்கு சென்ற கிராமத்தவர், தனது இரு கைகளையும் ஊதிக் கொண்டிருந்தார்.
அப்போது ஐஸ் மலை மீது இருந்தவர், “ஏன் கைகளை ஊதிக்கொண்டிருக்கிaர்கள்?” என்று கிராமத்து நபரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கிராமத்தவர், “குளிராக இருக்கின்றது. அதனால் ஊதிக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட ஐஸ் மலை மீது இருந்தவர், சூடான சூப் கொண்டு வந்து கொடுத்தார். சூப்பை கையில் எடுத்த கிராமத்தவர் அதையும் ஊதிக் கொண்டி ருந்தார். அதை அவதானித்த ஐஸ் மலை மீது இருந்தவர், “மீண்டும் ஏன் ஊதுகிaர்கள்?” என கேட்டார். அதற்கு பதிலளித்த கிராமத்தவர்” சூப் சூடாக இருக்கின்றது. அதனால் ஊதுகிறேன்” என்று கூறினார்.

அதற்கு ஐஸ் மலை மீது இருந்தவர்; “இவர் ஒரு பொய்க்காரர்” எனக் கூறி அவரை அடித்து விரட்டினார். இந்த கதையைப் போன்று தான் நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடு இருப்பதாக கூறும் விடயமும் இருக்கிறது என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.
“தென் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இங்கு பார்க்கும் போது இராணுவ தலையீடு அதிகமாக இருப்பது போன்று தான் தோன்றுகின்றது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமையினையும், தற்போது உள்ள நிலைமையினையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்” என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வட பகுதியில் வாழும் மக்களின் காணிகள் சுவீகரிக் கப்படவில்லை. மாறாக பல காணிகளை விடுவித்துள்ளோம்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காணி சுவீகரிப்பு என்பது அரசாங்கத்தின் பல்வேறு தேவைக்காக மேற்கொள் ளப்பட்டதாக இருக்கலாம். தவிர, தேவையற்ற நோக்கத்திற்காக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படவில்லை. யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படும். இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்aடான காணிகளோ அல்லது நட்டஈடோ வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. ஆனால், அங்கு சுவீகரிக்கப்படும் போது அங்குள்ள மக்கள் பார்க்கும் பார்வைக்கும் இங்குள்ள மக்கள் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கு பிரிவினைவாதம், பிரதேசவாதத் தினைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் எந்தவித காணிக ளும் சுவீகரிக்கப்படவில்லை. ஆனால், எந்த ஒரு அரசாங்கமும் விடு விக்காத பல காணிகள் விடுவிக்கப்பட் டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த மாகாண சபை ஆட்சி அதிகாரத்தை உங்க ளிடம் தருவதற்கு தயாராக இருக்கின்றார். இந்நிலையில் இந்த ஆட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் போனால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வட மாகாண மக்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக மஹிந்த சிந்தனையூடாக தெளிவாக கூறியுள்ளார். இதனிடையே உயர் பாது காப்பு வலயப் பகுதியிலுள்ள பொது மக்களின் காணிகளில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப் புக்கான காணிகளைத் தவிர ஏனைய பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் நிச்சயம் நாம் கையளிப்போம்.

அத்துடன் விஸ்தரிப்பின் போது பெறப் படும் காணிகளுக்கேற்ற பெறுமதியை அவற்றின் உரிமையா ளர்களுக்கு வழங்கப்படுமெனவும் வட மாகாணத்திலுள்ள காணிகளை அரசு பறிக்கின்றது என்று சிலர் கூறிவரும் நிலையில் இக்காணிகள் வட மாகாணத்தில் இந்திய அமைதிப்ப டையிருந்த போது எடுத்த காணிகள் என்பதுடன் நாம் அவற்றை படிப்படியாக மக்களிடம் மீண்டும் கையளித்து வருகின்றோம்.

தேர்தல் காலத்தில் எமது தரப்பு வேட்பாளர்கள் அதிகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றார்கள். இராணுவத்தினர் தேர்தலில் தலையிடுகின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
ந்த வட மாகாண சபைத் தேர்தல் என்பது தமிழ் மக்கள் தமது முக்கியமான முடிவுகளை எடுக்கும் சந்தர்ப்பமாகக் காணப்படுகின்றது. தமிழ் மக்கள் எடுக்கப்போகும் தீர்மானம் என்பது 2007 ஆம் ஆண்டுக்கு முந்திய நிலையையும் தற்போதைய நிலையையும் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டியதாகும்.

அன்று கொழும்பு வருவதாக இருந்தால் எத்தகைய சிரமங்களுக்கு உள்ளாகினார்கள். எத்தனை இராணுவ முகாம்களையும் சோதனை சாவடிகளையும் தாண்ட வேண்டிய நிலைமை காணப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாகாண சபையால் மேற்கொள்ள முடியாத பல பணிகளையும் நாம் வட மாகாணத்தில் மத்திய அரசினால் மேற்கொண்டுள்ளோம். நாம் செய்த பணிகளையிட்டு ஒரு சிலர் வேண்டும் என்றே விமர்சனங்களை மேற் கொண் டுள்ளார்கள். நாம் சில நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே இத்தகைய பணிகளை மேற்கொண்டுள்ளோம். தெற்கையும் வடக்கையும் இணைக்கும் புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் கிளிநொச்சி வரை நிறைவு பெற்றுள்ளது. இன்னும் இரண்டு ஒரு நாட்களில் யாழ் தேவி கிளிநொச்சி வரை தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இதேபோன்று விரைவில் யாழ்ப் பாணத்திற்கான புகையிரதப் பாதை அமைக்கும் பணிகளும் கூட நிறைவு பெறும். கிளிநொச்சி வரை கொண்டு வரப்பட்ட மின் இணைப்பை நாம் இலங்கை வலைப் பின்னலின் கீழ் சுன்னாகம் வரை நீடித்துள்ளோம். இதனையும் நாம் ஜனாதிபதி மூலம் இரண்டு ஒரு நாட்களில் திறந்து வைக்கவுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment