Wednesday, September 18, 2013

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு, தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அலுவலகங்களை அகற்ற உத்தரவு!

Wednesday, September 18, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு, தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அலுவலகங்களையும் நாளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் அகற்றுமாறு தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது
.
இதன்மூலம் மாவட்ட ரீதியாக ஒரு அலுவலகத்தை நடத்திச்செல்வதற்கான சந்தர்ப்பம் அரசியற் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் கிட்டுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
வேட்பாளரின் வீட்டை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான அலுவலகமாக பயன்படுத்தியிருப்பின், அதனை தொடர்ந்தும் பயன்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எவ்வாறாயினும், தேர்தல் வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றருக்குள் எந்தவொரு கட்சியினதும் பிரசார அலுவலகங்கள் செயற்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment