Wednesday, September 18, 2013

புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் படைகளின் தளபதி பதுமன் விடுதலை!

Wednesday, September 18, 2013
இலங்கை::புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் படைகளின் தளபதி பதுமன் விடுதலை!
 
புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் படைகளின் தளபதி  பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதனை திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பதுமன் இராணுவத்திடம் சரணடைந்ததுடன், அவர் பயங்கராத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் இராணுவத்தினரை கொலை செய்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.


இவருக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது இலக்கத்தின் விதிமுறையின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்தபோது இவர் 2001 ஆம் ஆண்டு ஜூலை – டிசம்பரிற்கும் இடையிலான காலப்பகுதியில் இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளார்.  

No comments:

Post a Comment