Wednesday, September 04, 2013
இலங்கை::வேலணை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பத்மநாபா ஈபிஆர்எல்எப் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசக்தி ஸ்ரீதரன் 1970 களிலிருந்து தொடங்கிய தனது அரசியல் வாழ்க்கையில் அகிம்சைவழியில் போராடியதை குறிப்பிட்டார்.
இலங்கை::வேலணை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பத்மநாபா ஈபிஆர்எல்எப் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசக்தி ஸ்ரீதரன் 1970 களிலிருந்து தொடங்கிய தனது அரசியல் வாழ்க்கையில் அகிம்சைவழியில் போராடியதை குறிப்பிட்டார்.
25வருட போராட்டக் காலத்தில் பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அது உயிர் உடைமைகள் இழப்பு என வார்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு இருந்திருக்கின்றன.
அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஆயுதம் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. அகிம்சைவழியில் சென்ற போதும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் உயிரிழப்பு, சொத்துக்கள் இழப்பு, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த சிறுவர்கள், அங்கவீனமுற்றோர், நிரந்தர அகதிகள் முகாம் வாழ்க்கை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடப்பெயர்வு என கணக்கிடப்பட முமடியாதவைகள்.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கான இழப்பு என்பது மிக மிக அதிகமானவை. ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்களுக்கு பெண் என்பவள் தாயாக, மனைவியாக, சகோதரியாக, நண்பியாக, மட்டுமல்ல ஆயுதம் ஏந்திய போராளிகளாகவும், உணவளித்தும், பாதுகாப்பு வழங்கியும் செயற்பட்ட இவர்கள் அன்றும் சரி இன்றும் சரி அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஆளானவர்களாகவே காணப்படுகிறார்கள்.
சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
தனிமையில் சென்று திரும்பும் போது சமூகம் தவறான கண்ணோட்டத்துடனனேயே நோக்குகிறது. குடும்பத்துக்கு, கட்டுப்படாதவள், தான்தோன்றிதனமாக செயற்படுகிறார்கள். என்ற வசவுகள் வேறு.
பெண்கள் இவ்வாறு பல வலிகளுடன் சமூகத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. குடும்பத் தலைவியாக, குடும்பத்தில் பொருளாதாரத்தை, குழந்தைகளையும், குடும்ப பொறுப்புக்களையும், சுமக்க வேண்டியுள்ளது இந்த நிலைமை மாற வேண்டுமானால் பெண்கள் அச்சத்துடன் இல்லாமல் அரசியலில் அறிவு ரீதியாக சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும்.
தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள
வேண்டும்.
அரசியலில் இன்று பெண்களில் 55 சதவீதமானோர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிக மிக குறைவானதாகவே காணப்படுகின்ற இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஊர்காவற்துறையில் உரையாற்றும் போது பெண்கள் சார்ந்த அரசியல் அமைப்புக்களுடன் இணைந்து மிகவும் வறுமையுடன் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு தன்னாலான தீர்வுகளை செயற்படுத்தி வருகிறேன்.
பெண்கள் சுதந்திரமாக வேலை செய்ய முடியாத நிலை குடும்பமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, காரியாலயங்கள், வேலைத்தலங்கள் எங்கும் சுதந்திரமாக இயங்க முடியாத நிலை இருக்கிறது. பெண்கள் அரசியலில் பலம் பொருந்தியிவர்களாக விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் எமக்கான அங்கீகாரத்தை சமூத்தில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
நாம் ஏன் சமத்துமற்ற முறையில் இருக்கிறோம் என்பதை பெண்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் சமூகத்தில் எமது பிரச்சினைகளக்கு என்ன தடையாக இருக்கின்றது என்பதை சற்று ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது. குடும்பமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் பல தடைகள் காணப்படுகின்றன. அரசியலில் பலமுள்ளவர்களாக காணப்படுவதற்கும், எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தெளிவான கொள்கையை முன்னெடுப்பதே சிறந்தது. அந்த வகையில் சரியானவர்களை தேர்ந்தெடுப்பது உங்களின் கடமையாகும்.
தொடர்ந்து தமிழ் மக்களை உருவேற்றும் அரசியல்தான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்றால் இதுவரை கடந்த 60 வருடங்களாக இருந்த அரசியல் நிலைமையை விட மிக மோசமான நிலைமைக்கு கொண்டு சென்று விடும். இணக்கப்பாடான அரசியல் கொள்கையை கொண்டு சின்ன சின்ன அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அரசியல் தீர்வு பேச்சுவாhத்தை என்னும் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென் சரணாகதி அரசியல் அல்ல.
சுயமரியாதையை விட்டுக்கொடுத்து செயற்படுவது என்பதல்ல. இணக்க அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சிறுபான்மை கட்சிகள், முற்போக்கான இடதுசாரிகள் என்பன இணைந்து காரியமாற்றுகின்றன. இவ்வாறு குறிப்பிட்டார்


No comments:
Post a Comment