Wednesday, September 11, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும் பிரதிநிதகளக்கு மேலதிகமான வெளிநாட்டு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது: அரசாங்கம்!

Wednesday, September 11, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும் பிரதிநிதகளக்கு மேலதிகமான வெளிநாட்டு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
குறிப்பாக பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
 
வழமையான பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
 
கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜகத் ஜயசூரியவின் தலைமையிலான குழுவினரே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர், முப்படையினர் நேரடியாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
 

No comments:

Post a Comment