Sunday, September 15, 2013
இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிடடு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்
ளன.இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிடடு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்
குறிப்பாக தலைநகர் கொழும்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது,சலூன்கள், தொடர்பாடல் நிலையங்கள், இந்திய பாகிஸ்தானியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்கள் முதல் கட்டமாக சோதனையிடப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிற்கு முதல் கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உலகத் தலைவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இரண்டாம் கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.
சில தரப்பினர் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment