Tuesday, September, 24, 2013
நியூயார்க்::விரிவான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வடக்கு மாகாணசபையில் ஆட்சியை அமைத்துள்ள புதிய கட்சியுடன் இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
வடக்கு மாகாணசபையில் ஆட்சியை அமைத்துள்ள புதிய கட்சியுடன் இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றமைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளா ஜென் பாஸ்கீ தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலத்தின் பின்னர் வடக்கில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்கது என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிவிலியன் நிர்வாகத்திற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment