Friday, September 6, 2013

புலிகளின் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கு புதிதாக மேல் நீதிமன்றம் ஒன்று: பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே!

Friday, September 06, 2013
இலங்கை::புலிகளின் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கு புதிதாக மேல் நீதிமன்றம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலேயே இந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே இந்த நீதிமன்றத்தை திறந்துவைத்தார்.

மனித உரிமைகளை பாதுகாத்தல் எனும் கொள்கை மற்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச அழுத்தங்களினால் ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல. கருணை,இரக்கம் மற்றும் பரிவு போன்றவற்றை கவனத்தில் கொண்டே இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டதாக மொஹான் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மொஹான் பீரிஸ் அவ்வாறான குற்றங்களை குறைப்பதற்கு பாடசாலைகள்,வீடுகள் மற்றும் சமூகம் பாரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment