Thursday, September 26, 2013
புது டெல்லி::பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அதிபர் ஒபாமாவை நாளை அவர் சந்தித்து பேசுகிறார். 29 ம் தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அவர் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டபடி நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதையொட்டி விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். வாஷிங்டன் போய் சேர்ந்த பிரதமருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பிரதமர் மன்மோகன்சிங் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். வாஷிங்டனில் நாளை வெள்ளிக் கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்து பேசுவார். இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஒபாமாவுடன் பிரதமர் பேச்சு நடத்துவார். அப்போது சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் 29 ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாக அடிக்கடி நவாஸ் ஷெரீப் கூறிவருகிறார். அதனால் அவரை பிரதமர் சந்திக்க கூடும். மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் துருப்புக்கள் அத்துமீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இது பற்றிய தனது கவலையை ஷெரீப்பிடம் பிரதமர் வெளிப்படுத்துவார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் பிரதமர் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு
பிரதமர் பின்னர் தாயகம் திரும்புவார். 
No comments:
Post a Comment