Thursday, September 26, 2013
இலங்கை::ஆயக்கச்சிக்கும் கட்டைக்காட்டுக்கும் இடையிலான 12 கி.மீ வீதி இராணுவத்தினரால் முழுமையாக புணரமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பொறியியல் பிரிவினரே மேற்படி வீதியை புணரமைத்துள்ளனர்.
முல்லியன்குளம், கெவில் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் உள்ளடங்கலாக புணரமைக்கப்பட்ட மேற்படி வீதி யாழ் தீபகற்பத்தில் இன்றியமையாததாகும்.
இப்பிரதேச வாழ் மக்கள் கடந்தகாலங்களில் சீரற்ற பாதையினால் பெரிதும் சிரமப்பட்டு பயணித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது புணரமைக்கப்பட்ட பாதையினால் மக்கள் தமது அன்றாட தேவைகளை இலகுவாக முன்னெடுக்கக்கூடியமையை இட்டு மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மனிதாபிமான நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் பல வகையிலும் அபிவிருத்திப் பணியில் உதவி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.அந்த வகையில் வீடுகள் நிர்மாணித்தல்,சமூகநலன்புரித் திட்டங்களை மேற் கொள்ளல்,வீதிகளை அமைத்தல் போன்றவை விசேடமானவையாகும்.
யாழ்ப்பாணத்துக்கும் நாகதீபத்துக்கும் இடையிலான புதிய பாதைச் சேவை ஆரம்பம்!
யாழ்ப்பாணத்துக்கும் நாகதீபத்துக்கும் இடையிலான புதிய பாதைச் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இச் சேவையினூடாக நாகதீப விகாரைக்கு செல்லூம் பக்தர்கள் மற்றும் நாகதீப பிரதேச வாசிகளும் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல இது தொடர்பாக குறிப்பிடும் போது யாழ்ப்பாணத்துக்கும் நைநாதீவுக்கும் இடையில் தினமும் பயணிக்கும் மக்களின் வேன்டு கோளுக்கு இனங்க இச்
சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நீண்ட கால தேவையாக காணப்பட்ட இப்பாதைச் சேவையினை ஆரம்பித்து வைத்தமைக்காக அரசிற்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். அத்துடன் இப்பாதைச் சேவையினூடாக வாகனங்கள் மற்றும் பொருட்களை எவ்வித சிரமமுமின்றி மக்கள் கொண்டு செல்ல முடிவதுடன் இதனூடாக 80 தொன்கள் பாரத்துடன் பயணிக்கக்கூடயதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment