Wednesday, September 11, 2013

இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீ்ன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை: ராஜித்த சேனாரட்ன!

Wednesday, September 11, 2013
இலங்கை::இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து  மீ்ன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரச உடமையாக்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும்  கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக இந்திய மீனவர்கள் வடக்கு , புத்தளம் மற்றும் கற்பிட்டி போன்ற கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கு மீனவர்களுடனான பேச்சுவார்தைகள் போதுமான தீர்வாக அமையவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
சட்டமா அதிபர், வெளிவிவகார  அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய தரப்புக்களுடன்  கலந்துரையாடியதன் பின்னரே,  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக   கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment