Friday, September 13, 2013

திருகோணமலையில் பொலீஸ் மட்டத்தில் ஆலோசனைக் குழுக்கல் செயற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!

Friday, September 13, 2013
இலங்கை::பொலீஸ் மட்டத்தில் ஆலோசனைக் குழுக்கல் செயற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை பொலீஸ் அத்தியட்சகர் ஜே.ஏ. கே. மாக் அன்டனி தலைமையில் நேற்று வியாழக்கிழமை குளக்கோட்டன் பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.
 
இக்கலந்துரையாடலானது இலங்கையிலே கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பொலீஸ்மா அதிபர் கபில ஜெயசேகர,திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ. ரஞ்சித் டிசில்வா, பட்டினமும் சூழலும் பிரதேசசெயலாளர் சசிதேவி ஜலதீபன், நகரசபைத் தவிசாளர் கே. செல்வராசா, கந்தளாய், மூதுார் கிண்ணியா,மொறவெவ, பதவிஸ்ரீபுர, கோமறங்கடவெல ,குச்சவெளி ஆகிய பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், சர்வமதப் பெரியார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
திருகோணமலையின் ஏழு 7 பிரதேசங்களிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களை அழைத்து பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடைலிலான நல்லுறவை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
 
பிரதி பொலீஸ்மா அதிபர் உரையாற்றுகையில் பொலீஸ் மற்றும் பொது மக்களுக்குமிடையிலான சட்டரீதியான தொடர்பு அன்னியொன்னியம் தற்பொழுது குறைந்துள்ளது அவற்றை ஏற்படுத்த வேண்டும் என மதிப்புக்குரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இதனால்தான் கிராம மட்டங்களில் சிவில் பாது காப்பு குழுக்கள் அமைத்து அதன் ஊடாக கிராமத்திலுள்ள துஸ்பிரயோகங்கள் மற்றும் பிரச்சினைகள் என்பவற்றை குறைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment