Friday, September 13, 2013

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வழங்கியது டெல்லி விரைவு நீதிமன்றம்!

Friday, September 13, 2013
புதுடெல்லி::டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க கோரி நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வந்தது.

இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ந் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.

நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததை அடுத்து, டெல்லியில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரியில் வழக்கின் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் டெல்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment