Sunday, September 15, 2013
இலங்கை::தமிழ்க் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தன் இன்று கடுமையாக விமர்சிக்கும் இதே பாதுகாப்பு தரப்பினர் தான் ஒரு காலத்தில் அவரின் உயிரை காப் பாற்றி அவரை தேர்த லில் வெற்றிபெற வைத் தனர். அதனை இன்று சம்பந்தனும் அவருடன் கூட உள்ளவர்களும் மறந்து விட்டனர் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
வடக்குத்தேர்தல் காலத்தில் இராணு வத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தல் பிரசாரத்தை இலக்கு வைத்து சம்பந்தன் வெளியிடும் கூற்றுக்கள் எமக்கு ஆச்சரியமயளிக்காவிடினும் கவலையளிக்கின்றது. பாதுகாப்புத் தரப்பினர் தமது உயிரை தியாகம் செய்து சம்பந்தனை பாதுகாத்து வெற்றிபெற வைத்துள்ளனர்.
புலிகள் சுதந்திரமாக இருந்த காலத்தில் வடக்குத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சம்பந்தன் கேட்டதில்லை. ஆனால் இந்த பாதுகாப்புத் தரப்பினர்தான் தமது உயிரைத் தியாகம் செய்து இன்று வடக்குத்தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment