Friday, September 20, 2013

வடமாகாண, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாணங் களுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறும் மூன்று மாகாண சபை தேர்தல்களுக்கான ஒழுங்குகள் பூர்த்தியடைந்துள்ளன!

Friday, September 20, 2013
இலங்கை::வடமாகாண, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாணங் களுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள் ளது. இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் கிடைத் திருக்கும் மிகப்பெரிய உரிமையான வாக்குரிமையை அன்றைய தினம் அனைத்து மக்களும் சரியான முறையில் பயன்படுத்து வது அவசியமாகும்.
 
வாக்களிப்பதற்கு தகுதியுடைய எவரும் தனது வாக்கை பதிவு செய்யாமல் இருப்பது சம்பந்தப்பட்டவர் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர் என்றே கருதப்படுவார்.
 
இம்மூன்று மாகாணசபைத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு தகுதியு டைய அனைவரும் தங்கள் பொன்னான வாக்கை தாங்கள் விரும்பிய ஒரு கட்சி அல்லது ஒரு சுயேச்சை அணியைச் சேர் ந்த வேட்பாளர்களுக்கு பதிவு செய்வதற்கு பூரண சுதந் திரத்திற்கும் உரிமைக்கும் எங்கள் நாட்டின் அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கிறது.
 
சூரிய உதயத்துடன் அதிகாலை 7.00 மணிக்கே வாக்காளர்கள் தாங் கள் வாக்கை பதிவு செய்யும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று காலதாமதமின்றி வாக்களிக்க வேண்டும். சனிக்கிழமை பி.ப. 4.00 மணிவரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய் வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 
மூன்று விருப்பு வாக்குகளை இந்தத் தேர்தலில் பதிவு செய்ய வேண்டும். எனவே, தாங்கள் விரும்பும் வேட்பாளர்களின் இல க்கம் என்ன என்பதை முன்கூட்டியே தீர்மானித்த பின்னர் தாங் கள் வாக்களிக்கும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் தேர் தல் சின்னம் என்ன என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பின் னர் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சி அல்லது சுயேச்சை குழுவின் தேர்தல் சின்னத்திற்கு முன்னால் குறியிட வேண்டும். பின்னர் தாங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களின் இலக்கங் களுக்கு குறியீடு செய்து வாக்குளை பதிவு செய்ய வேண்டும்.
 
தேர்தல்களில் வாக்குகளை பதிவு செய்யச் செல்லும் போது வாக்கா ளர்கள் கூடியவரை தங்கள் பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வாக்களிப்பு நிலை யத்திற்கு வாக்காளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்லா மல் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்களிப்பு நிலை யங்களுக்கு நடந்தே செல்ல வேண்டும்.
 
வாக்குகளை பதிவு செய்த பின்னர் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலை யத்திற்கு வெளியில் கூட்டமாக நிற்காமல் உடனடியாக தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பிவிட வேண்டும். வாக்களிப்பு நிலை யத்திற்கு வெளியில் மக்கள் அநாவசியமாக குழுமி இருப்பத னால் தான் பெரும்பாலும் வன்முறைகள் ஏற்படுவதுண்டு. அத னால், பொலிஸாருடன் ஒத்துழைத்து வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.
நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளின் அனுமதியுடன் அவர்களை வாக்களிப்பு நிலைய த்திற்கு வாகனங்களில் அழைத்து வருவதற்கும் அவர்களை வாக் களிப்பு நிலையத்திற்கு கைலாக்காக தூக்கிச்செல்வதற்கும் அனு மதியளிக்கப்படும்.
 
தாம் எந்தக் கட்சிக்கு அல்லது எந்த சுயேச்சை குழுவுக்கு வாக்களி க்கப் போகிறோம் என்பதை வாக்காளர்கள் கூடியவரை இரகசி யமாக வைத்து வாக்குகளை பதிவு செய்வது நல்லது. பகிரங்க மாக ஒரு கட்சியை ஆதரிக்கிறேன் என்று வாக்களிப்பு நிலைய த்திற்கு அருகில் குரல் எழுப்பி செல்பவர்கள் சில சந்தர்ப்பங்க ளில் எதிரணியினரின் அதிருப்திக்கு உள்ளாகி சில சந்தர்ப்பங்க ளில் வாக்குவாதங்கள், அடிதடி சண்டைகள் கூட ஏற்படலாம்.
இந்த மூன்று மாகாணசபைத் தேர்தலின் போது சட்டத்தையும், ஒழு ங்கையும் நிலைநாட்டுவதற்காக பொலிஸ்மா அதிபர் 24,500 பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளார். இவர்கள் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் முடிவுகள் அனைத்தும் அறி விக்கும் வரை சுமார் 72 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுடன் பொலிஸ் வாகன ங்களும், மோட்டார் சைக்கிள்களும் இம்மூன்று மாகாணங்களி லும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு அசம்பாவிதங்கள் இடம்பெ றுவதை தடுப்பதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
 
தேர்தல் கடமைகளில் 40 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் சேவை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரையில் தேர்தல் தொடர் பாக 180 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் மூன்று மாகாணங்களில் இருந்து பதிவாகியுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரிலும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட 137 பேர் கைதாகியுள் ளார்கள்.
 
தேர்தல் சட்டங்களை உதாசீனம் செய்தவர்கள் பயன்படுத்திய 15 வாக னங்களையும் பொலிஸார் இப்போது தடுத்து வைத்துள்ளார்கள். தேர்தலின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய தொல் லையாக இருப்பது கண்ட கண்ட இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதும், பதாகைகளை கட்டுவதுமாகும். சுவரொட்டிகளை கிழித்தெறிந்து பதாகைகளை அகற்றுவதற்கென தேர்தல் ஆணை யாளரின் ஊடாக திறைசேரி பொலிஸாருக்கு ஒரு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் ஆணையாளரும் அரசாங்கமும் வன்முறையற்ற, இரத்தம் சிந்தாத அமைதியான தேர்தலை நடத்துவதற்காகவே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்துள்ளது. எனவே, பொதுமக்களும் அமைதியை காப்பதற் காக தேர்தல் நடக்கும் மாகாணங்களில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

No comments:

Post a Comment