Friday, September 06, 2013
இலங்கை::புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் கூட பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தயாராகவே உள்ளது .யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் திறந்த கொள்கையுடனேயே செயற்பட்டது.

ஆனால் அவற்றை தவறாக அர்த்தப்படுத்திய சர்வதேச பார்வையே இலங்கை மீதும் காணப்படுகின்றது.என தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஆலோசகர் கலாநிதி ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது போலியான பிரசாரமாகும். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் யுத்தம் முடிவடையும் வரை வடக்கில் 7 ஆயிரம் பேர் மாத்திரமே கொல்லப்பட்டனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பதே உண்மை.
புலம்பெயர்ந்து வாழும் புலிகள் இலங்கைக்குள் மீண்டும் செயற்பட சந்தர்ப்பம் தேடுகின்றனர். 10 வீதமான தமிழர்கள் சர்வதேசத்தில் வாழும் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஆகவே இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச பாதுகாப்புச் செயலமர்வின் இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கலாநிதி ரொஹான் குணரட்ன மேற்கண்டவாறு கூறினார்.

No comments:
Post a Comment