Monday, September 23, 2013

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 615 வாக்குகள் நிராகரிப்பு!

Monday, September 23, 2013
இலங்கை::வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 615 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது.
 
அளிக்கபட்ட வாக்குகளில் கண்டி மாவட்டத்தில் வட மாகாணத்திலும் கூடுதலான 7.25 வீதம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களி லும் 4459 தபால் மூல வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை தேர்தலில் 43,58,263 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்ததோடு 28,73,182 பேரே வாக்களித்திருந்தனர். இதில் வட மேல் மாகாணத்தில் 53,215 வாக்குகளும் (4.77%) மத்திய மாகாணத்தில் 82,162 (6.46%) வாக்குகளும் வடக்கில் 35,239 (7.29%) வாக்குகளும் நிராகரிக்கப்பட்டன. கண்டி மாவட்டத்தில் 39,148 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment