Thursday, September 12, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதை தொடர்ந்து கட்சி த¬லைவர் திருமாவளவன் தலைமையில் தடையை மீறி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து திருமாவளவன், தலைமை நிலைய செயலாளர் பாவரசு, செய்தி தொடர்பாளர் வன்னியரசு, கொள்கை பரப்பு துணை செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, தனிசெயலாளர் இளஞ்சேகுவாரா உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் 500 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது, Ôஇலங்கையில் ராஜபக்சே தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இதை செய்யவில்லை.
இது இந்திய அரசியல் சட்ட அமைப்பிற்கு விரோதமானது. பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து உடனடியாக திரும்ப பெற வேண்டும்Õ என்றார்.

No comments:
Post a Comment