Wednesday, September 25, 2013
திருச்சி::திருச்சியில் நாளை பாரதிய ஜனதா இளந்தாமரை மாநாட்டில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். இதையொட்டி, பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருச்சி பொன்மலை ஜிகார்னர் மைதானத்தில் நாளை மாலை பாரதிய ஜனதா இளந்தாமரை மாநாடு நடக்கிறது. கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், குஜராத் முதல்வரும், பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆகியோர் பேசுகின்றனர். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்கு செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது என மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, திருச்சி வரும் மோடிக்கு வரலாறு காணாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணி தொடர்பாக 5 டிஐஜிக்கள், 12 எஸ்பிக்கள், 7 ஏஎஸ்பிக்கள் மைதானத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் பேசுகையில், ‘பரபரப்பான சூழலில் பாஜ மாநாடு நடக்கிறது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் சீரிய முறையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கருப்பு கொடி காட்ட முயற்சிப்போரை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்‘ என்றார். இன்று மாலை விமான நிலையம் முதல் மாநாட்டு மேடை வரை கார்கள் அணிவகுப்பு நடத்தி ஒத்திகை பார்க்கப்பட உள்ளது.
மாநாட்டுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இது குறித்து, போலீசார் கூறியதாவது: நாளை மாலை 3 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஓட்டலுக்கு செல்கிறார். சிறிது நேர ஓய்வுக்கு பின், 4.15 மணிக்கு மேடைக்கு வருகிறார். மாநாடு முடிந்த பின்னர் இரவு 8 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். மாநாட்டு மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேடையை சுற்றிலும் குஜராத் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். இதையடுத்து, தமிழ்நாடு போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் இருப்பர். மைதானத்திற்கு வெளியே பிற மாவட்ட போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இன்று மாலைக்குள் ஆளில்லா விமானம் வர உள்ளது. அதை தொடர்ந்து ஆளில்லா விமானம் விமான நிலையம், மோடி வரும் பாதைகள் மற்றும் மாநாட்டு மைதானம் முழுவதும் உளவு பார்க்க உள்ளது. மைதானம் முழுவதும் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன் நேற்றிரவு திருச்சி வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். உளவு பிரிவு ஐஜி அம்பரீஷ் பூஜாரி பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த திருச்சி வருகிறார். மோடி வருகையையொட்டி, திருச்சியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோடியின் வருகைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கருப்புக்கொடி காட்டப் போவதாக இவை எச்சரித்துள்ளதால், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் வாகனங்களில் சோதனை நடக்கிறது. திருச்சி மட்டுமல்லாது, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment