Thursday, September 19, 2013

மலேசியா கோலாலம்பூரில் நோபயர் சோன் என்ற புலிகளின் ஆதரவு செனல் 4 தொலைகாட்சியின் கொலைக்களங்களை வெளியிட்ட இருவருக்கு எதிராக வழக்கு!

Thursday, September 19, 2013
கோலாலம்பூர்::கடந்த ஜூலை மாதம் மலேசியாவில் புலிகளின் ஆதரவு செனல்  4 தொலைகாட்சியின் கொலைக்களங்களை திரையிட்டார் என்ற குற்றத்திற்காக இருவர் மீது அன் நாட்டுப் பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
 
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், கடந்த ஜூலை 3ம் திகதி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. மலேசியாவில் இயங்கிவரும் மனித உரிமை ஆர்வலர்களான, லீனா மற்றும் கோமாஸ் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஆவர். இவர்கள் இந்த ஆவணத்திரைப்படத்தை, திரை அரங்கில் வெளியிடவில்லை. மாறாக அதனை மாநாட்டு மண்டபத்தில் தான் போட்டுக் காட்டியிருந்தார்கள்.  இவர்களை மலேசியப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் .

மேற்படி மலேசியாவில் உள்ள தணிக்கை குழுவின் அனுமதி இன்றி இந்த ஆவணப்படத்தை அவர்கள் திரையிட்டார்கள் என்று பொலிசார் தற்போது வழக்கை பதிவுசெய்துள்ளார்கள். புலிகளின் ஆதரவு கொலைக்களங்கள் திரையிடப்பட்டவேளை அதன் இயக்குனர் காலம் மக் ரே அவர்கள் மலேசியாவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். அவரைப் பொலிசார் கைதுசெய்யவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து உடனடியாக லண்டன் புறப்பட்டு வந்துவிட்டார். இலங்கை அரசுடன் மிக நெருங்கிய உறவுகளை மலேசிய அரசு பேணிவருகிறது என்பதற்கு இதுவே சிறந்ததொரு உதாரணமாகும்.

 

No comments:

Post a Comment