Sunday, September 15, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் அதிகளவான படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை::யாழ்ப்பாணத்தில் அதிகளவான படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண முகாம்களில் அதிகளவான படையினரை நிலைநிறுத்துமாறு கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்படாது மக்களுடன் கலந்துள்ள 4000 புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூண்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்தும் வடக்கில் கடுமையான இராணுவப் பிரசன்னத்தின் அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில செயற்பாடுகளே இவ்வாறு இராணுவ பிரசன்னத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து தொடரப் போவதாக' வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இராணுவத்தினர் பிரசன்னம் மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment