Thursday, September 26, 2013

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை, 327 ஆக உயர்ந்துள்ளது!

Thursday, September 26, 2013
இஸ்லாமாபாத்::பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை, 327 ஆக உயர்ந்துள்ளது. பாகி“ஸ்தானில், நேற்று முன்தினம், 7.7 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால், பலுசிஸ்தான் மாகாணத்தின், ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, அவாரன் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை, இந்த பகுதிகளில், 327 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளனர். பலுசிஸ்தானின் பெரும்பாலான கிராமங்கள், மலைபாங்கான இடத்தில் அமைந்துள்ளதால், பூகம்பத்தால், அங்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து, முழுமையான தகவல் கிடைக்கவில்லை.
நிவாரண பொருட்களை அப்பகுதிகளுக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 
அவாரன் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த, 400க்கும் அதிகமானவர்களுக்கு, மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூகம்பத்தால், குவாதர் மாவட்டத்தின், அரபி கடல் பகுதியில், சிறிய தீவு உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment