Thursday, September 19, 2013

இலங்கையில் எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது: அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே!

Thursday, September 19, 2013
இலங்கை::இலங்கையில் எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாதென விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வைத்தே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் என்றுமில்லாத மாற்றம் ஏற்பட்டதாகவும், இன்று ஐ.தே.க. உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அண்மையில் தயாசிறியும் அரசுடன் இணைந்துகொண்டதாகவும், தற்போது பஸ் முற்றாக நிரம்பி இருக்கின்றபோதிலும் மிதி பலகையில் பயணிக்கவும் பலர் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment