Thursday, September 12, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள்
குறித்து இதுவரை 110 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள்
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் மத்திய மாகாணத்திலேயே கூடுதலான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தலுடன் தொடர்புடைய 130 முறைபாடுகள் இதுவரை பொலிஸில் பதிவாகியுள்ளன.
இவற்றுள் 57 முறைபாடுகள் மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பேராதனை, கண்டி மற்றும் கடுகண்ணாவை பகுதிகளில் இருந்து மூன்று துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களிலும் தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment