Monday, September 09, 2013
இலங்கை::புலிகளின் 107 முன்னாள் புலி போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். இன்றய தினம் இந்தப் போராளிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதன்படி, இன்னமும் 232 முன்னாள் புலிபோராளிகள் மட்டுமே சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். வவுனியாவில் இந்த முன்னாள் புலி போராளிகள் இன்றய தினம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர்.
குறித்த முன்னாள் போராளிகள் வெற்றிகரமாக தொழிற் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். 11631 புலி உறுப்பினர்கள் அரசாங்கப்படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்களில் 232 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், ஏனைய அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்த சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைத் தரம் மற்றும் மொழிப் பயிற்சி போன்ற துறைகளில் முன்னாள் புலிபோராளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் புலிகளுக்கு சுயதொழில் கடன்களை வழங்குவதற்கு அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

No comments:
Post a Comment