Monday, August 26, 2013

நவனீதம் பிள்ளைக்கு எவரையும் சந்திக்கும் உரிமையுண்டு ஆனால் அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை பக்கச்சார்பற்றதாக இருக்க வேண்டும்: மஹிந்த சமரசிங்க!

Monday, August 26, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கும் அறிக்கை பக்கச்சார்பற்றதாக அமைய வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
யட்டிநுவர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நவனீதம் பிள்ளைக்கு எவரையும் சந்திக்கும் உரிமையுண்டு ஆனால் அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை பக்கச்சார்பற்றதாக இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதற்குத் தாம் எதிர்ப்பை வெளிப்படுத்த போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் திறந்த வகையில் செயற்படுவதாகவும், எந்தவொரு தருணத்திலும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் மனிதவுரிமைகள்; தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்
 
இலங்கை வெளிப்படையாக செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், ''நாம் யாருக்கும் அடிபணிய தேவையில்லை'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment