Tuesday, August 13, 2013
சென்னை::இந்தியா, இலங்கையிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் இலங்கையிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய பாராளுமன்றம் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஸ்யா, இலங்கை, அமெரிக்கா, போலந்து, ஸ்லோவாக்கியா, பிரித்தானியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து முப்படையினர் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆன்டனி தெரிவித்துள்ளார். கோடிக்கணகக்hன ரூபா பெறுமதியான ஆயுதங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
ரஸ்யாவிடமிருந்து பாரியளவில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இலங்கையிடமிருந்து எவ்வாறான ஆயுதங்கள் எவ்வளவு ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்ட என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புலிகளுக்கு எதிரான யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவிடமிருந்து இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் கொள்வனவு செய்து பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment