Tuesday, August 13, 2013

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

Tuesday, August 13, 2013
புதுடெல்லி::இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் நாளை மறுநாள் டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
டெல்லியில் நடக்கும் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ–தொய்பா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலை தாக்குதலில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.

இதையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாகன சோதனையும், கண்காணிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் உளவுத்துறையினர் நேற்று டெல்லி போலீசாருக்கு 2 எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பினார்கள். அதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய அரசு அலுவலகங்களுக்குள் வெளி வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக சுமார் 530 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த 530 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி புறநகர்களில் இருந்து டெல்லிக்குள் வரும் எல்லா வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. சந்தேகப்படும் நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய பிறகே அனுமதிக்கிறார்கள்.
டெல்லியில் செய்யப்பட்டுள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்களிடம் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment