Tuesday, August 27, 2013
இலங்கை::சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும், இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரிவுகளை கோரியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதனை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமென அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 12 படகுகளை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

No comments:
Post a Comment