Sunday, August 25, 2013

இருட்டடிப்பு செய்யப்படும் வடக்கின் உண்மை நிலை!

Sunday, August 25, 2013
இலங்கை::வடபகுதி தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல் களில் துளியளவும் உண்மையில்லையென்பதை நேரில் வந்து பார்த்தவுடன் புரிந்து கொண்டோம். இலங்கை தொடர்பாகத் தாம் கொண்டிருந்த நிலை ப்பாடு உண்மைக்குப் புறம்பானது என கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இந்திய ஊடகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். வடபகுதியில் பலவேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன், அங்குள்ள மக்கள் நிம்மதியாக பயமற்றதொரு திருப்திகரமான வாழ்க்கையை வாழ்ந்துவருவதாகவும் இந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்திருப்பதனை விடவும், யுத்தத்திற்குப் பின்னரான வடக்கு மக்களின் உயர்வான இன்றைய வாழ்வு நிலை பற்றி கூறுவதற்கு எதுவுமே இல்லை எனலாம்.
 
உண்மையில் இந்த இந்திய ஊடகவியலாளர்கள் குழு தெரிவித்த கருத்து முழுச் சர்வதேசத்திற்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதொரு தகவல். யுத்தம் முடிவடைந்த கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங் கையில் இருந்த நிலை முற்று முழுதாக மாறி தற்போது அமைதி யானதொரு சூழல் காணப்படுகின்றது. வடக்கிலுள்ள மக்களுக்கு இன்றைய அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் தாராளமாகவே கிடைத்து வருகிறது. இது குறித்து அம்மக்கள் பூரண திருப்தியடைந்துள்ளனர். யுத்தத் தினால் பாதிக்கப்பட்டிருந்த அரசாங்கக் கட்டடங்கள், வணக்கஸ்தலங்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றுடன் சகல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
 
இந்த உண்மை நிலையை இந்திய பத்திரிகையாளர்கள் குழு நேரடியாகச் சென்று அவதானித்து வந்துள்ளது. இதுவரை காலமும் இந்தியாவில் தங்கியிருந்த தமக்கு வடக்கில் இன்னமும் மக்கள் நிம்மதியாக வாழ வில்லை எனவும், அவர்கள் அன்றாட வாழ்விற்கே கஷ்டப்படுவது மாகவே தெரிவிக்கப்பட்டது. சர்வதேச ஊடகங்கள் அவ்வாறே பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் இவர்கள் இலங்கை வந்து வடக்கிற்கு நேர டியாகச் சென்று வந்ததில் உண்மை எதுவெனப் புரிந்து கொண்டுள்ளனர்.
அங்குள்ள மக்களின் உண்மையான நிலை சர்வதேசத்திற்குச் சரியான முறையில் வெளிக்கொணரப்படுவதில்லை.
 
 உண்மைக்கு மாறான தகவல் களே இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகின்றன. இலங் கைக்கு வரமுன்னர் வடபகுதி தொடர்பாக இருந்த எமது நிலைப்பாடு நேரில் வந்து பார்த்ததும் முற்றாக மாறியுள்ளது. எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்று இந்த இந்திய ஊடகவியலாளர் குழுவிற்குத் தலைமை தாங்கி வந்த இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் பால பாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இந்த உண்மையை உலகம் முழுவதும் தாம் எடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதொரு விடயம். எமது நாட்டிற்கு நிகழ்காலத்தில் அவசியமானதொன்றாகவும் இது உள்ளது. இதற்காக நாம் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
 
திரு. பால பாஸ்கரா குறிப்பிட்டது போன்று சர்வதேசத்திற்கு இவ்விடயம் எடுத்துச் செல்லப்படும் அதேவேளை இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு இவ்விடயத்தை அவசரமாகவும், விரிவாகவும் முதலில் எடுத்துச் செல்ல வேண்டும். இவர்கள் இதனைச் சரியாகவே செய்வார்கள் என்பதை அவர்களது உரையாடல்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
உண்மையில் தமிழகத்திலுள்ள சில அரசியல் லாபம் தேடும் அரசியல்வாதிகள் மூலமாகவே இலங்கை தொடர்பான விமர்சனங்கள் அங்கு மிகைப்படுத்தப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. இது நிச்சயமாக ஒட்டுமொத்த இந்தியர்களின் நிலைப்பாடல்ல. இந்தியாவில் வாழும் நூறு கோடி மக்கள் தொகையில் தமிழகத்தில் ஆறு கோடியினரே உள்ளன. அதிலும் ஒரு சிறிய பகுதியினரே இலங்கை தொடர்பான விமர்சனங்களைக் கொண்டுள்ளனர். இதற்கு தமிழகத்திலுள்ள அரசியல் வாதிகள் சிலரே காரணமாகவும் உள்ளனர். தமது உள்ளூர் அரசியல் இருப் பிற்காக அவர்கள் இப்பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகக் கையா ளுகின்றனர்.
 
வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறித்து ஒருசிலர் தமது விமர்சனங்களை எம்மிடம் தெரிவித்தபோதும் அங்கு அதில் உண்மையில்லை என்பதை தாம் நேரில் கண்டதாகவும், சிலர் கூறுவது போன்று அதிகமான இராணுவத்தினரைத் தாம் எங்குமே காணவில்லை எனவும் இந்த ஊடகவியலாளர் குழு தெரிவித்திருக்கிறது. இத்தகைய விமர்சனங்கள் தமிழக உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடு போன்று வடக்கிலுள்ள உள்ளூர் அரசியல்வாதிகளின் செயலாகவே தாம் பார்ப்பதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த இந்த இந்திய ஊடக வியலாளர்கள் கண்டுகொண்ட உண்மை நிலைவரத்தை வருடக்கணக்கில் அப்பகுதிகளிலேயே இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளால் உணர முடியாமலிருப்பது வேதனை தரும் விடய மாகும். தமது அரசியல் காய் நகர்த்தலுக்காக அரசாங்கம் செய்துவரும் அபிவிருத்திப் பணிகளைக் குறைத்தும், மறைத்தும் தாம் சார்ந்த ஊட கங்களில் இதுவரை காலமும் இவர்கள் தெரிவித்துவரும் குற்றச்சா¡ட் டுக்களுக்கு இந்திய ஊடகவியலாளர்களது விஜயம் முற்றுப் புள்ளி வைக்குமெனத் திடமாக நம்பமுடியும்.
 
அவர்களும் இலங்கையின் உண்மை நிலைவரத்தை தமது நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகள் சகலவற்றிற்கும் எடுத்துச் செல்ல தம்மாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும். வடபகுதி தொடர்பான நிலைமைகைளை நேரில் சென்று உண்மையை அறிந்துகொண்ட தாம் அதனை இந்தியா சென்று அங்குள்ள ஊடகவியலாளர்களுக்குக் கூறவுள்ளதாகவும் தெரிவித் துள்ளனர்.
சார்க் நாடுகளில் துரிதமாக அபிவிருத்தி கண்டுவரும் நாடாக இலங்கை அமைந்துள்ளது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் சிறந்த கட்டமைப்பொன்றை இலங்கை கடைப்பிடித்து வருகிறது. எதிர்வரும் காலங்களில் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் ஊடகவியலாளர் குழுவிற்குத் தலைமை தாங்கி வந்த திரு. பால பாஸ்கர் தெரிவித்துள்ள நம்பிக்கை தரும் கருத்து விரைவாகவே உண்மையாக வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

No comments:

Post a Comment