Wednesday, August 28, 2013

வட மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்!

Wednesday, August 28, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கௌரவ நவநீதம் பிள்ளை ஏழு நாட்களுக்கு இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அவருடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையினை சேர்ந்த 5 உயர் அதிகாரிகளும் வருகைதந்துள்ளனர்.

இவ்விஜயத்தின் போது இலங்கையின் வட பகுதிக்கு வருகைதந்த நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களினை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 27 ஆகஸ்ட் 2013 அன்று சந்தித்து வட மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கலந்துரையாடினார். காலை உணவுடனான கலந்துரையாடலில் 2009 ம் ஆண்டு போர் நிறைவிற்கு வந்தபின் மேற்கொள்ளப்பட்ட பிரதான அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் நல்லிணக்க செயற்பாடுகள் தொட்ரபாகவும் ஆளுநர் எடுத்துரைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் கேட்கட்பட்ட மீள்குடியிருப்பு, புனர்வாழ்வு மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான வினாக்களுக்கு ஆளுநர் தெளிவான பதில்களை வழங்கினார்.

பின்னர் மாகாணத்தின் கீழ் வருகின்ற மாவட்ட மட்ட முன்னேற்ற விளக்கவுரை சிறப்புக்கூட்டமானது யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆளுநர் மற்றும் மாகாண உயர் அதிகார்கள் ஆகியோர் வட மாகாணத்தில் 2009 ஆண்டு போரின் பின்னர், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச்செயற்பாடுகள் தொடர்பாகவும் மீள் குடியேற்றம், நல்லிணக்க செயற்பாடுகள், மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாகவும் சுருக்கமாக விபரித்தார்கள். மீள்குடியிருப்பு, புனர்வாழ்வு, வாழ்வாதார செயற்பாடுகள், உட்கட்டுமாண அபிவிருத்தி, விவசாயம், மீன்பிடி, கல்வி,  சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய துறைகளில் தமது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவருத்தி பணிகளை அவ்வவ் மாவட்ட செயலாளர்கள் எடுத்துரைத்தார்கள்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் அவர்கள் வட மாகாண ஆளுநர் மற்றும் மாகாண உயர் அதிகாரிகளின் சிறந்த வரவேற்பு மற்றும் விருநதோம்பல் பண்பை வெகுவாக பாராட்டி பேசினார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் விரும்பி உரை நிகழ்த்தினார். அத்துடன் ஒவ்வொரு மாவட்டங்களைபற்றியும் விரிவான அறிமுகத்தைத் வழங்கிய மாவட்ட செயலாளர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்..
 
வட மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நூலகத்தில் இடம் பெற்ற வட மாகாண மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தாம் மனித உரிமைகள் தொடர்பாக ஆராயவே இலங்கை வந்தததாக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த பிரதேசங்களில் மேற்கொண்ட விஜயத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்க கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment