Wednesday, August 21, 2013
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நாளைய தினம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து அமைச்சர் ஜி.எல். பீரிஸ், கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பிரிஸ், பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பிதழை இந்தியப் பிரதமரிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment