Tuesday, August 20, 2013
இலங்கை::தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக நீதியில் தீர்வுகாண தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை::தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக நீதியில் தீர்வுகாண தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கனடாவுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று பிரச்சினையைத் தீர்க்க முடியாது உள்நாட்டில் ஜனநாயக ரீதியிலேயே பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தெற்கைவிட வடக்கிலேயே அரசாங்கம் பாரிய நிதி செலவிட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு சேவை செய்யும் போது நாம் அரசியலை பார்ப்பதில்லை. வடக்கு- தெற்கு- மலையகம் என்று பேரம் பார்ப்பது இல்லை. இனம்- மதம் பிரதேசமென பாரபட்சம் காட்டுவதுமில்லை.
அதனால்தான் நாடு என்ற ரீதியில் சகல பிரதேசங்களையும் எம்மால் கட்டியெழுப்ப முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரகரி வாவி பூங்கா அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நுவரெலியா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் சி. பி. ரத்நாயக்க- நவீன் திசாநாயக்க- பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உட்பட அரசியல் முக்கி யஸ்தர்கள்- உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஜனா திபதி மேலும் உரையாற்றுகையில் :-
ஆங்கிலேயர் குட்டி இங்கிலாந்து என வர்ணித்த போதும்- நுவரெலியா பிரதேசம் இருளடைந்திருந்த யுகம் ஒன்றிருந்தது. பல தசாப்தங்கள் இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. அந்த நிலை இப்போது மாற்றமடைந்து எழில் கொஞ்சும் நகரமாக அபிவிருத்தியடைந்து வருகிறது.
சுகாதாரம்- கல்வி- வீதி அபிவிருத்தி என சகல துறைகளும் தற்போது முன்னேற்றமடைந்துள்ளன. சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை 6000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தோட்டப்புற ஆஸ்பத்திரிகள் அரசுடமையாக்கப்பட்டு அவை அனைத்தையும் அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது.
கல்வியைப் பொறுத்தவரை க. பொ. த. சாதாரண தரத்தில் சித்திபெறுவோர் தொகை 100 ற்கு 17 ஆக இருந்ததை நாம் 100 ற்கு 44 வீதமாக அதிகரித்துள்ளோம்.
ஆசிரியர் நியமனம் உட்பட கல்வித் துறையில் நாம் மேற்கொண்ட அபிவிருத்தியே இவற்றுக்குக் காரணமாகும். மலையக பெருந்தோட்டத்துறை பாடசாலைகளுக்கு மாத்திரம் புதிதாக 1994 ஆசிரியர்களை நியமித்துள்ளோம்.
வடக்கு- கிழக்கு- தெற்கு- மலையகம் என்ற பேதம் எம்மிடமில்லை. அபிவிருத்தியாகட்டும் மக்களுக்கான சேவைகளாகட்டும் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றமாகட்டும் நாம் சகலதையும் சரிசமமாகவே பார்க்கிறோம். சகல துறைகளையும் மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.
மக்களுக்கான சேவைகளை எந்த பிரதியுபகாரத்தையும் எதிர்பார்த்து நாம் மேற்கொள்வதில்லை. அதேவேளை கட்சி- அரசியல்இ இன- மத- பேதங்களையும் பார்ப்பதில்லை.
நாட்டில் சர்வதேச விமான நிலையம் ஒன்று தான் இருந்தது. அதனால் அதிக பாரம் சுமந்து வரும் விமானங்கள் தரையிறக்க முடியாத நிலை உருவாகி சில சமயம் சென்னைக்குச் சென்று அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொளள் நேர்ந்தது. தற்போது மத்திய விமான நிலையம் அதற்குத் தீர்வாகியுள்ளது.
700 வருடங்களுக்குப் பின்பே துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பிரசித்தி பெற்ற துறைமுகங்களை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.
நாம் இன்றைய நிலையை மட்டுமன்றி எதிர்காலம் பற்றி சிந்தித்தே சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். வெளிநாட்டுக் கப்பல்களை எதிர்பார்த்துக் காத்திருந்த யுகத்துக்கும் நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
நுவரெலியாவில் வீதி அபிவிருத்தி பூங்கா அபிவிருத்தி பற்றி தற்போது பேச இடமில்லை. விமான நிலையம்- ‘கேபிள்கார்’ திட்டம் பற்றியே தற்போது சிந்திக்கிறோம். நாம் குறுகிய விதத்தில் சிந்திப்பதில்லை. மக்களுக்கான எமது பொறுப்பை நிறைவேற்றி வருகின்றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி மலையக மக்கள் நாட்டின் உயிர் நாடி. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பொய் பிரசாரங்களை மக்கள் நம்பக்கூடாது.
அரசாங்கத்தோடு மோதிக்கொண்டு செயற்படாமல் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சகலரும் முன்வரவேண்டும். அதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மலையக மக்களுக்காக கல் வீடு- மின்சாரம்- வீதி அபிவிருத்தி கல்வி என சகல முன்னேற்றகரமான திட்டங்க ளையும் கடந்த காலங்களில் முன்னெடுத் தோம்.
எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும். நாம் ஒரே சகோதரர்களாக இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மத்தள விமான நிலையத்தை சிலர் நகைச்சுiபாயக நோக்குகின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
மத்தள விமான நிலையத்தை சிலர் நகைச்சுiபாயக நோக்குகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், விமான நிலையத்தின் ஊடாக நாடு அடைந்துள்ள நன்மைகளை எவரும் கண்டுகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப முடியாத விமானங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இன்று அந்த நிலை மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்
கொழும்புத் துறைமுகம் சர்வதேச தரத்தில் காணப்படுவதாகவும் ஹம்பாந்தோட்டையில் மற்றுமோரு துறைமுகம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எப்போதும் இன்று என்பதனை நினைத்து செயற்பட வேண்டாம் எனவும் எதிர்காலத்தை நினைத்து செயற்படுமாறுமே தாம் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment