Tuesday, August 27, 2013

இலங்கைக்கும், பெலாரஸ் நாட்டுக்கும் இடையில் நேற்று ஏழு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன!


Tuesday, August 27, 2013
இலங்கை::இலங்கைக்கும், பெலாரஸ் நாட்டுக்கும் இடையில் நேற்று ஏழு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டர் லுகோஷன்கோ ஆகிய முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
 
பொருளாதார ஒத்துழைப்புகள்,  ராஜதந்திர, விமான சேவைகள், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 
 
அதேவேளை மூன்று நாள் பயணமாக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பெலாரஸ் பிரதமர் மிஹாயில் மியஸ்கிநோவ்வை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்..
 
பல்வேறுப்பட்ட தரப்பினரின் தேவைக்கு அமைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை போன்ற நிறுவனங்கள் இலங்கை மற்றும் பெலரூஸ் ஆகிய நாடுகளை இன்னல்களுக்கு உள்ளாக்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலரூஸ் ஜனாதிபதி எலக்ஸ்சேன்டர் லுகசென்கோவை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மனித உரிமை சபையை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய, பெலரூஸ் ஜனாதிபதி சமூகத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைளை தமது அரசாங்கம் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

இதற்கமைய, இலங்கையுடன் வர்த்தக, பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்புக்கள் என்பனவற்றை விஸ்தரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதனிடையே, இரண்டு நாடுகளுக்கிடையேயான ஏழு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்தானதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment