Monday, August 12, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வொஷிங்டனுக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தற்போது கனடாவிற்கு விஜயம் செய்துள்ளனர். கனேடிய விஜயத்தை முடித்துக் கொண்டு அவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
நாட்டின் அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு தேர்தல்கள் மற்றும் ஏனைய நிலைமைகள் குறித்து சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment