Monday, August 12, 2013

தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றியோ அந்தப் பிரதேச அபிவிருத்தி பற்றியோ எத்தகைய அக்கறையும் கொள்ளாமல் குழப்பகரமான அரசியல் சிந்தனைகளுடனும் குளறுபடியான கொள்கைகளுடனும் அரசியல் செய்து வருகின்றது!

Monday, August 12, 2013
இலங்கை::யுத்த அழிவுப் பிரதேசத்தில் அரசாங்கம் துரித அபிவிருத்தியை மேற்கொண்டு வருகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கையை கருத்திற்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதேவேளை தமிழ் மக்களின் காவலனாக தன்னை இனங்காட்டியுள்ள தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றியோ அந்தப் பிரதேச அபிவிருத்தி பற்றியோ எத்தகைய அக்கறையும் கொள்ளாமல் குழப்பகரமான அரசியல் சிந்தனைகளுடனும் குளறுபடியான கொள்கைகளுடனும் அரசியல் செய்து வருகின்றது. இந்த நிலையில் வடமாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியே வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ் தெரிவித்தார். யாழ். மாநகரசபையின் தமிழ்க் கூட்டமைப்பின் முன்னாள் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமீடியஸ் வழங்கிய பேட்டியை இங்கு தருகின்றோம்.
கேள்வி: அரசாங்கத்தின் வாக்கு வங்கி அதிகரிப்பு, சரிந்து வரும் தமிழ்க் கூட்டமைப்பின் செல்வாக்கு காரணமாக அரசாங்கம் வடமாகாண சபையைக் கைப்பற்றுமெனக் கூறுகின்aர்கள். இதனை சற்று விளக்குவீர்களா?
 
பதில்: கடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்க் கூட்டமைப்பு வெற்றி பெற்றமை என்னவோ உண்மைதான் ஆனால் தமிழ் மக்களின் சிந்தனையின் வடிவங்கள் தற்போது மாற்றமடையத் தொடங்கியுள்ளது. புலிகளினதும் அவர்களுக்கு ஆதரவான கட்சிகளினாலும் சொல்ல முடியாத துன்பங்களையும் அவலங்களையும் சந்தித்த இந்த மக்கள் தற்போது உண்மை நிலையை உணரத் தலைப்பட்டுள்ளனர். இந்த மாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களை மக்கள் மெச்சி வருகின்றனர்.
இதனால் தமிழ்க் கூட்டமைப்பின் பிரபல்யம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் கூட்டமைப்பு இதுவரையில் எந்த ஒரு முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை. சர்வதேச சமூகம் இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பாற்றுமென கூட்டமைப்பு கூறி வருகின்றது. மிக முக்கிய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் அந்தக் கட்சிக்கு எத்தகைய அடிப்படைக் கொள்கைகளும் கிடையாது.
 
காலத்துக்குக் காலம் முரண்பட்ட கொள்கைகளையே அவர்கள் கொண்டுள்ளனர். முக்கியமான அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புக் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்துகள் இல்லை. ஒரே நிலைப்பாடு இல்லை. முதன்மை வேட்பாளர் தெரிவிலும் கூட அவர்களிடம் மாறுபட்ட கருத்தே நிலவியது. கட்சியின் தலைமைத்துவம் மேற்கொண்ட தீர்மானம் விமர்சனத்துக்குள்ளாகியது. இவர்கள் தமிழ்த்தேசியத்தைப் பற்றி கதைக்கின்றனர். தமிழ் மக்களை தவறான வழியில் நடத்துவதற்காக உதட்டளவில் சொல்லும் வார்த்தைப் பிரயோகமே இது. அவர்கள் எந்த அர்ப்பணிப்புக்களையும் தமிழ் மக்களுக்காக மேற்கொண்டதில்லை. அவர்களின் பாராளுமன்ற ஆசனங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் செளகரியத்துக்காவே பயன்படுகின்றன.
 
இந்த கசப்பான உண்மைகளை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகாலமாக நடைபெற்ற கொடூர யுத்தத்தின் விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பல பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தமிழ்க் கூட்டமைப்பும் பங்களிப்புச் செய்துள்ளனரென்றே கூற வேண்டும். மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வசதியுடன் வாழவே எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் ஒத்துழைப்பு நல்கி ஐ.ம.சு முண்ணனியை அதிகாரத்துக்கு கொண்டு வந்தால்தான் இந்த இலக்கை உரிய முறையில் அடைந்து கொள்ள முடியும். முரண்பட்ட பிடிவாதமான அரசியல் மூலம் எந்த இலக்கையும் அடைய முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அரசியல் இணக்கப்பாடு, மூலம் பல்வேறு காரியங்களை மேற்கொள்ள முடியும். இழந்த உயிர்களைத் தவிர அனைத்து உதவிகளையும் குறிப்பாக வடக்கு பிரதேசத்தை முழுமையாகக் கட்டியெழுப்பும் அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை செயல்வடிவில் நிரூபித்தும் வருகின்றார். சமாதானத்தையும் மக்கள் மகத்துவமாக சுயகெளரவத்துடன் வாழும் நிலையையும் உருவாக்க அவர் பாடுபடுகின்றார். வடமாகாணத்தில் 3 தேர்தல்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. தற்போது மாகாண சபைத் தேர்தல்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட மாட்டாதென அவர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
 
கேள்வி: காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்படமாட்டாதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கின்aர்கள்?
 
பதில்: மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதனை தமிழ்க் கூட்டமைப்பும் அவர்களது வெளிநாட்டு அனுதாபிகள், ஆதரவாளர்கள் அதனைப் பயன்படுத்தி பிரிவினைக்கு அடித்தளமிடுவரென்ற பாரிய சந்தேகம் பெரும்பான்மை சமூகத்தில் நிலவுகின்றது. அவர்கள் அவ்வாறு நினைப்பதற்கு காரணங்களும் இருக்கின்றன. 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையின் கீழ் 1988ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணசபைக்கு முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் தெரிவானார். பின்னர் தமிழ்த்தேசிய இராணுவம், சிவில் தொண்டர் படை ஆகியவை உருவாக்கப்பட்டன.
பொலிஸ் அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்ட இந்த துணைப்படைகள் சொல்ல முடியாத அராஜகங்களையும் நேர்மையற்ற நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கு மக்களுக்கு புரிந்தனர். கூட்டமைப்பின் பங்காளியாக இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆலோசகராக அவ்வேளை பணிபுரிந்தார். இறுதியாக மாகாண நிர்வாகம் தனித் தமிbழப் பிரகடனத்தை வெளியிட்டது. தென்னிலங்கை மக்களுக்கு இது நன்கு தெரியும் எனவே ஐ.ம.சு முன்னணி இந்த மாகாணத்தை கைப்பற்றினால் இவ்வாறான பிரச்சினைகள் எழ நியாயமில்லை.
 
கேள்வி: வடமாகாணத்தை ஐ.ம.சு முன்னணி கைப்பற்றினால் எந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்.
 
பதில்: யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் ஒழுங்கான வருமானமின்றி தவிக்கின்றனர். இந்த விடயத்துக்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். சுமார் 7 சதவீதமான மக்கள் குடிநீர் இன்றியும் மலசலகூட வசதியுமின்றி வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் ஆயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர். நாங்கள் இந்த விடயங்களை கருத்திற்கெடுத்து முறையான திட்டங்களை வகுத்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.
 
1983 - 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்பாதுகாப்பு வலய தடை காரணமாக பாதிக்கப்பட்ட ஏராளமான மீனவக் குடும்பங்களுக்கு இதுவரையில் எந்தவிதமான நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை. இவ்வாறு துன்பப்படுபவர்களுக்கு எந்த ஒரு உதவியேனும் வழங்கப்படவில்லை. எனவே இவர்களுக்கு கொடுப்பனவும் வசதிகளும் கிடைக்க வேண்டும். மாகாணசபை இவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயலாற்றும். அத்துடன் விவசாயக் குடும்பங்களின் நலன் பேணுவது தொடர்பில் நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வோம்.
 
கேள்வி: தமிழ்த் தேசியம் தொடர்பான தங்கள் பார்வை என்ன?
 
பதில்: மக்கள் நலன்களில் அக்கறை இல்லாதவர்கள் தமது சொந்த அரசியல் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கில் தமிழ்த் தேசியம் பற்றி பேசுகின்றனர். பல்வேறு இயக்கங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் அரசியல் கைதிகளாக இன்று இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் பற்றி எதுவித சிந்தனையும் இல்லாதவர்கள் இனவாத சிந்தனைகளை விதைத்து மக்களை வழிகெடுக்கின்றனர். அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பானது இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் அத்துமீறுவதது பற்றியோ கடல்வளங்களை சூறையாடுவது பற்றியோ வாயே திறப்பதில்லை.

No comments:

Post a Comment