Thursday, August 15, 2013

நாடுகடந்த தமி­ழீழ அர­சுடன் உள்­நாட்டில் பலர் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்­றனர்: ஜகத் ஜய­சூ­ரிய!

Thursday, August 15, 2013
இலங்கை::நாடுகடந்த தமி­ழீழ அர­சுடன் உள்­நாட்டில் பலர் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்­றனர் என புல­னாய்வு தக­வல்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. அண்­மையில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் நான்கு பேர் மேற்­படி அமைப்பின் செய­ல­மர்வு ஒன்­றிலும் கலந்­து­கொண்­டுள்­ளனர். அதே­போன்று, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களான இரா. சம்­பந்தன், எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும் கன­டா­வுக்கு சென்று நாடு கடந்த தமி­ழீழ அமைப்­பு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இது அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயல் என்பதுடன் தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்­த­லான விட­ய­மாகும் என்று கூட்­டு­ப­டை­களின் தலைமை அதி­கா­ரி­யான ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

எதிர்­வரும் மாதங்கள் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். பொது­ந­ல­வாய மாநாடு , நவ­நீ­தம்­பிள்­ளையின் வருகை, வட­மா­காண சபைத் தேர்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் அமர்­வுகள் என்­ப­வைக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­பட வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. இதனை குழப்­பி­ய­டிக்க உள்­நாட்டில் பலரும் செயற்­ப­டு­கின்­றனர். ஆகவே, ஊட­கங்கள் தேசிய பாது­காப்­புக்கும் நாட்டின் நற்­பெ­ய­ருக்கும் முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­பட வேண்டும். முப்­ப­டைகள் தொடர்­பாக பொது­மக்கள் மதிப்பை இழந்­து­விட்டால் நாட்டில் சமா­தா­னத்­தையும் நீதி­யையும் பாது­காப்­பது சவா­லா­கி­விடும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­டப கட்­டிட தொகு­தியில் அமைந்­துள்ள கூட்டு படை­களின் தலை­மை­ய­தி­காரி அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­கை­யி­லேயே ஜெனரல் ஜகத்­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

கடந்த நான்கு வருட காலத்தில் பொலிஸார் உள்­ளிட்ட முப்­ப­டையினர் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­பட்­டனர். தற்­போது இரா­ணுவ தள­பதி பத­வி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்று கூட்­டுப்­ப­டை­களின் பத­விக்கு ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளேன். தற்­போது எனது பொறுப்­புகள் வேறு­பட்­டுள்­ளது. அதா­வது, பொலிஸ் உள்­ளிட்ட முப்­ப­டை­க­ளுடன் முறை­யான தொடர்­பா­டல்­களை மேற்­கொண்டு அதனை பாது­காப்பு செய­லா­ள­ருக்கு அறி­வித்தல் எமது கட­மை­யாகும்.

எதிர்­வரும் பொது­ந­ல­வாய மாநாட்டில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பாரிய பொறுப்­புக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கைக்கு வரும் அரச தலை­வர்கள் மற்றும் அமைச்­சர்கள் என்­ப­வர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தல் மற்றும் வாகன ஒழுங்­குகள் மேற்­கொள்ளல் உட்­பட பல்­வேறு விட­யங்கள் பாது­காப்பு தரப்­பிற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்கு வரு­கை­த­ர­வுள்ளார். இவ­ரு­டைய பாது­காப்பு விட­யங்கள் இரா­ணு­வத்­திடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ நவ­நீ­தம்­பிள்­ளையை சந்­தித்து இலங்கை இரா­ணு­வத்­திற்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள போர் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தவுள்ளார். இதன்­போது இரா­ணுவம் சார்­பா­கவும் விளக்­க­ம­ளிப்­புகள் இடம்­பெ­ற­வுள்­ளது.
அதே­போன்று வட­மா­காண சபை தேர்தல் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் இட­ம்­பெ­ற­வுள்­ளது. இது­தொ­டர்­பிலும் கூட்டு படை­களின் தலை­மை­ய­தி­கா­ரி­யென்ற வகையில் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­கின்றேன். மேலும் எதிர்­வரும் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்­களில் இடம்­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையின் கூட்­டத்­தொடர் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நாட்டின் நற்­பெய ரை பாது­காத்து எதிர்­வரும் சவால்­களை முறி­ய­டிக்­கவும் செயற்­பட வேண்­டி­யுள்­ளது.
இலங்­கையைப் பொறுத்­த­வரை ஆயுத ரீதி­யி­லான பயங்­க­ர­வாத போராட்டம் முழு அளவில் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால், சர்­வ­தே­சத்தில் புலம்­பெ­யர்ந்த புலி ஆத­ர­வா­ளர்கள் இன்னும் தமி­ழீழ போராட்­டத்தை பல்­வேறு வழி­களில் முன்­னெ­டுக்­கின்­றனர். குறிப்­பாக நாடு கடந்த தமி­ழீழ அரசை அமைத்துக் கொண்டு இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்­கின்­றனர். இவர்­களே இலங்­கையில் நடை­பெ­று­கின்ற பொது­ந­ல­வாய மாநாட்­டிற்கு ஏனைய நாடு­களின் தலை­வர்கள் செல்­லக்­கூ­டா­தென்றும் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
அண்­மையில் புல­னாய்வு பிரி­வுக்கு கிடைத்த தக­வல்­க­ளின்­படி யாழ். மற்றும் பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் உள்­ளிட்ட குறிப்­பிட்ட பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த நான்கு விரி­வு­ரை­யா­ளர்கள் ஆராய்ச்­சிக்­கென கூறி கடந்த 12ஆம் திகதி இங்­கி­லாந்து சென்று அங்கு நடை­பெ­று­கின்ற நாடு கடந்த தமி­ழீழ அரசின் செய­ல­மர்வு ஒன்றில் கலந்­து­கொண்­டுள்­ளனர். இவர்கள் எதிர்­வரும் 20ஆம் திகதி வரை அங்கு இருப்­பார்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. அதே­போன்று கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்­பாக தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும் கன­டா­வுக்கு சென்று மேற்­படி அமைப்­பு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இவ்­வாறு விட­யங்கள் நாட்டின் அர­சிய­ல­மைப்­புக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளாகும் இவற்­று­க்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும்.
தேசிய பாது­காப்பும் நாட்டின் நற்­பெ­ய­ரையும் பாது­காக்க வேண்­டி­யது முதன்­மை­யான கடமையாகும். நாட்டில் குழப்பகரமான சூழ்நிலைகள் ஏற்படும்போது அதனை ஊடகங்கள் பொறுப்புடன் அறிக்கையிட வேண்டும். குறிப்பாக வெலிவேரிய சம்பவம், கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் மற்றும் கோட்டை புகையிரத நிலையத்தில் எதிர்க்கட்சி முன்னெடுக்கின்ற ஆர்ப்பாட்டம்போன்ற விடயங்கள் பொதுநலவாய மாநாட்டை சீர்குலைப்பதற்காக முன்னெடு க்கப்படுகின்ற திட்டங்களாகவும் காண ப்படுகின்றன. எந்தவொரு சந்தர்பங்களிலும் முப்படைகள் தொட ர்பில் தவறான அபிப்பிராயத்தை பொதுமக்கள் மத்தியில் ஊடகங்கள் ஏற்படுத்திவிடக்கூடாது. அது தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரமல்லாது நிலை யான அமைதிக்கும் சவாலாகிவிடும் எனக்கூறினார்.

No comments:

Post a Comment