Wednesday, August 28, 2013

நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே:- நவிப்பிள்ளை புலி­களின் ஆத­ர­வாளர், அவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு புலம்­பெயர் தமி­ழர்­களின் செயற்­பா­டு­களை ஆத­ரிப்­பவர்: சத்தாதிஸ்ஸ தேரர்!

Wednesday, August 28, 2013
இலங்கை::பிரபாகரனின் தந்தை வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரியே இலங்கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார். இவரின் வரு­கை­யா­னது இலங்கைக்கு பாத­க­மா­ன­தொரு விளை­வி­னையே நிச்­சயம் ஏற்­ப­டுத்தும்.என்று இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர்  தெரிவித்துள்ளார். 
 
இலங்கை சிங்­கள நாடு இங்கு வே
ற்று இனத்­த­வ­ருக்கு இட­மில்லை. இலங்­கைக்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்தும் நவ­நீ­தம்­பிள்­ளை­யினை உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டர்ர.
 
நவிப்பிள்ளை  புலி­களின் ஆத­ர­வாளர் அவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு புலம்­பெயர் தமி­ழர்­களின் செயற்­பா­டு­களை ஆத­ரிப்­பவர் அவர் பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­வதை நாம் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார். 
 
சனல் 4 காணொ­ளி­களைப் பார்த்து விட்டு இலங்கை மீது குற்றம் சுமத்­து­வதை ஏற்க முடி­யாது. அமெ­ரிக்கா பல நாடு­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளது. ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்­கா­வினால் செய்­யப்­பட்ட படு­கொ­லைகள் தொடர்பில் ஏன்  நவி­ப்பிள்ளை குரல் கொடுக்க வில்லை? எனவும் கேள்வி எழுப்பினார். 
 
நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்கு எப்­போது வேண்­டு­மென்­றாலும் வரலாம். அவர் ஓய்­வெ­டுக்க விடு­மு­றை­யினை அனு­ப­விக்க இலங்­கைக்கு வரலாம். ஆனால் இலங்­கையை எதிர்த்து அறிக்கை சமர்ப்­பிக்க அவர் வர முடி­யாது என்றும் இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர்  தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment