Wednesday, August 28, 2013

புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்: முஸம்மில்!

Wednesday, August 28, 2013
இலங்கை::புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக ஜே.என்.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜே.என்.பி கட்சியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
 
நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்து அபிவிருத்தித் திட்டங்களை பார்த்து பாராட்டுவார் என அரசாங்கம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நவனீதம்பிள்ளை சாதகமான கருத்துக்களை வெளியிடுவார் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், நவனீதம்பிள்ளை தமிழ் புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்றன உலகின் முக்கியமான நிறுவனங்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்ற போதிலும், தற்காலத்தில் இந்த நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். லிபியா, ஈராக் போன்ற நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் எதனையும் செய்ய முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment