Thursday, August 15, 2013
இலங்கை::பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளார். எதிர்வரும் நாட்களில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்றன தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் விளக்கமளிக்க உள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் மற்றும் வடக்குத் தேர்தல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டது என கூட்டுப் படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சில தரப்பினர் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் புலம்பெயர் சமூகம் நாட்டுக்கு எதிரான சூழ்;;ச்சித் திட்டங்களை தீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment