Sunday, August 18, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழரிடம் பெறும் நிதிக்கு என்ன நடக்கிறது?

Sunday, August 18, 2013
இலங்கை::தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கனடா மற்றும் அமெரிக்காவிற்குச் சென்றுதிரும்பியுள்ள அதேவேளை கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று வந்துள்ளார். இவர்களது இவ்விஜயங்கள் குறித்து கூட்டமைப்பிலுள்ள சக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளமையால் அவர்கள் தமது அதிருப்தியை இப்போது வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டணி. அதில் தமிழரசுக் கட்சியும் சம அந்தஸ்துக் கொண்டதொரு கட்சியாகவே ஏனைய கூட்டுக் கட்சிகளால் கருதப்படுகிறது. இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்களிலும் சரி, தேர்தல் காலங்களிலும் சரி கூட்டுக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்படும் தமிழரசுக் கட்சி இத்தகைய வெளிநாட்டு விஜயங்க ளின்போது மட்டும் கூட்டுக் கட்சிகளைக் கழற்றிவிட்டு சென்றுவருவது வாடிக்கையாகிவிட்டது என்பதே கூட்டுக் கட்சிகளின் தலைவர்களது ஆதங்கம்.
 
அதில் உண்மை இல்லாமல் இல்லை. தேவைக்கு தோள் மேல் கை போடுவதும் பின்னர் கண்டு கொள்ளாத ஒரு நிலையிலுமே தமிழரசுக் கட்சியினர் நடந்து கொள்வது இப்போது மேலும் ஊர்ஜிதமாகியுள்ளது. இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்து அதற்கு தனியானதொரு வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டுமெனக் கூட்டுக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
 
ஆனால் இவ்விடயத்தில் தமிழரசுக் கட்சி செவிடன் காதில் ஊதிய சங்காகவே செயற்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் மும்மரமாகக் குரல் கொடுத்து வந்த சுரேஸ் பிரேமச்சந்திரனின் குரல் இப்போது முன்னர் போன்று ஒலிப்பதில்லை. உட்கொடுக்கல் வாங்கல் காரணம் எதுவும் இருக் கலாம் எனும் சந்தேகம் ஏனைய கூட்டுக் கட்சிகளுக்கு இல்லாமலில்லை. இருந்தும் சம அந்தஸ்து என வெளியே கூறிக்கொண்டு வெளிநாடுக ளுக்குத் தனித்துச் சென்று கிடைக்கும் பணத்தை தனியாகச் சுருட்டிக் கொள்வதில் தமிழரசுக் கட்சி பிறருக்குத் துளியளவும் இடம் கொடுப் பதில்லை.
 
அத்தகையதொரு முன்னேற்பாட்டில்தான் தேர்தலைக் காரணங்காட்டி புலம்பெயர் தமிழரிடம் நிதி சேகரிக்க தமிழரசுக் கட்சியின் தலைவரும், சுமந்திரன், சிறிதரனும் சென்றுள்ளனர். இவர்களால் அங்கு சேகரிக்கப்படும் நிதி எங்கு செல்கிறது? எக்கணக்கில் வைப்பிலிடப்படுகிறது? எதற்காகச் செலவிடப்படுகிறது? என்பது சென்று வருவோரைத் தவிர எவருக்குமே தெரியாத ஒரு விடயமாகவே உள்ளது.
 
கடந்த வருடம் கனடா சென்று அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு இதுவரை என்ன நடந்தது எனத் தெரியாத நிலையில் இவ்வருடமும் இவர்கள் அங்கு நிதி சேகரிக்கச் சென்றிருப்பது வடக்கில் சக பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்லாது பொதுமக்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. காரணம் இவ்வாறு பெறப்படும் ஒரு சிறு தொகைப் பணம் கூட இதுவரை செலவிடப்படவில்லை என்பதேயாகும்.
 
கனடா, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் எதனை யும் கூறாது மூடிமறைத்து இங்கு மக்கள் கஷ்டப்படுவதாகக் கூறி இவர் களால் சேகரிக்கப்படும் பணத்திற்கு என்ன நடக்கிறது எனும் கேள்வி இப்போது வடக்கில் மக்கள் மத்தியில் பலமாக எழுந்து. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் தமக்கு இவ்வாறு பெறப்படும் நிதியிலிருந்து பணம் வழங்குமாறு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கி யுள்ளனர்.
 
கடந்த காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணம் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சிலரது தனிப்பட்ட வங்கிக் கணக்கு களில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவற்றிலிருந்து ஒரு சதம் கூட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகச் செலவிடப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இவ்வாறு சேகரிக்கப்படும் நிதி இவர்களது வெளிநாடுகளிலுள்ள குடும்பங்களுக்கும், அவர்களது பிள்ளைகளின் மேற்படிப்பிற்குமாகவா செலவிடப்படுகின்றன எனும் சந்தேகமும் ஏனைய தலைவர்கள் மத்தியிலும், மக்களது மனங்க ளிலும் எழுந்துள்ளது.
 
மூன்று வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் சிலரால் சேகரித்து அனுப்பிவைக்கப்பட்ட சுமார் எண்பது இலட்சம் ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியா மலுள்ளதாகக் குறிப்பிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்பணம் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பியின் அல்லது அவரது மகளின் தனிப்பட்ட பெயரிலேயே வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டியி ருப்பது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறே கடந்த காலங் களில் வெளிநாடுகளிலிருந்து மக்கள் அனுப்பி வைத்த பெருந்தொகை நிதி தனிப்பட்ட முறையில் கையாடப்பட்டிருக்கலாம் என்பது இப்போது சந் தேகமின்றித் தெளிவாகிறது.
 
இந்த உண்மை நிலை புரியாத புலம்பெயர் வாழ் தமிழர் அமைப்புக்கள் மீண்டும் மீண்டும் இவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து வருகின் றனர். அரசாங்கம் வடக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங் களையும் மக்கள் அப்பகுதியில் சமாதானமாக அமைதியான சகஜ வாழ்வு வாழ்ந்து வருவதனையும் புலம்பெயர் மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இனியும் வெறுமனே தமிழ்த் தேசியம், தமிbழம் எனப் பேசி காலத்தை வீணடிக்காது உள்நாட்டில் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் பணி யாற்றும் கட்சிகளையும், அரசாங்கக் கட்சிகளில் தம்மை நேரடியாக இணைத்து செயற்பட்டுவரும் கட்சிகளையும் ஆதரித்து பாதிக்கப்பட்ட மக் களது எதிர்காலம் சிறக்க புலம்பெயர் நாடுகளிலிருந்து ஆலோச னைகளையும், ஆதரவுகளையும் வழங்க வேண்டும். இல்லையேல் நீங்கள் குளிர்நாடுகளில் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் இங்கே சில தனிப்பட்டவர்களது அதிசுகபோக வாழ்விற்கே வழிகோலுவதாக அமைந்துவிடும்.

No comments:

Post a Comment