Wednesday, August 21, 2013

போர் குற்றங்கள் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புக் கூறவேண்டும்!

Wednesday, August 21, 2013
இலங்கை::போர் குற்றங்கள் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை விளக்கும் வீடியோ காட்சிகளை ஐக்கிய நாடுகள் மனழித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
வன்னியில் இருந்த புலிகளின் பதுங்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட பல வீடியோ நாடாக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும் நடத்திய ரகசியமான பேச்சுவார்த்தைகள் தொடர்பான காட்சிகள் அடங்கியிருப்பதாகவும்  இவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புலிகளின் ஆலோசனையின் பிரகாரம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது என்பதற்கான ஆதாரம் இந்த வீடியோவிலும் ஆவணங்களில் உள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
 
இலங்கை இராணுவத்தின் போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துமாறு, நவநீதம்பிள்ளையிடம் கோரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.  இதனையடுத்தே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 

No comments:

Post a Comment