Monday, August 19, 2013
இலங்கை::இன ரீதியான வேறுபாடுகளோ, மத ரீதியான முரண்பாடுகளோ திருகோணமலை மாவட்டத்தில் தோன்றுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மனி;த உழைப்பே அவசியமாகும்.இங்கு இனம் என்றும் மதம் என்றும் வேறுபாடு காட்டி பிரிக்க முடியாது என திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.

(18) கிண்ணியா, காக்காமுனைப் பிரதேசத்தில் திவி நெகும திட்டத்தின் கீழ்,மரக்கறி சேகரிப்பு நிலையத்தை உத்தியோகமாகத் திறந்து வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றும் போது:-
நான் ஒரு பௌத்தனானாலும் இந்த மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கே அதிகமான சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.கிண்ணியா நகர சபைத் தலைவர் டாக்டர் ஹில்மியின் வேண்டுகோளுக்கினங்க,கிண்ணியா நகரசபை எல்லைக்குள் பல அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். அதே போன்று கிண்ணியா பிரதேச சபைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்கவும் இந்த மரக்கறி சேகரிப்பு நிலையம் மாத்திரமன்றி இன்னும் பல அபிவித்தத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.
மணல் வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றுவதிலும் பார்க்க, போசாக்கான உணவுகளை உற்பத்தி செய்வதே இன்று முக்கியமானதாகும்.இந்த நிலையத்தின் மூலம் இப்பிரதேசம் உப உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும்.
பயிர்ச் செய்கைக்காக மரங்களை விரும்பியவாறு அழிக்க முடியாது.மரங்களையும் நாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.அப்போதுதான் எதிர்கால சந்ததியினர்களை நாம் வாழ வைத்தவர்களாக மாறுவோம் என்று தெரிவித்தார்.
இதன்போது கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா,கிண்ணியா நகர சபைத் தவிசாளர் டாக்டர் எம்.எம்.ஹில்மி,கிண்ணியா உதவித் திட்மிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸ்இல்.மற்றும் சமூர்த்தி அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வைபவத்தில் அமைச்சரின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள பத்து முன் பள்ளிகளுக்கு அலுமாரிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment