Wednesday, August 14, 2013
இலங்கை::சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக, காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திருகோணமலை, களுவாஞ்சிகுடி, கந்தளாய் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 14 பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
அவர்களில் 6 பேர் கடந்த 9ம் திகதியும், நேற்றைய தினம் ஏனைய சந்தேக நபர்களும் கைதாகினர்.
கைதானவர்களுள் கடற்படையைச் சேர்ந்த 4 அதிகாரிகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளுது.
அவர்கள் அனைவரும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில், எதிர்வரும் 15ம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயாராக இருந்த 39 பேர் மாத்தறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த 14 பேரும் கைதானதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன கூறியுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்களால் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு ஒருவரை அனுப்புவதற்கு 8 இலட்சம் ரூபா பணம்
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றமையுடன் தொடர்புடையதாகத் தெரிவித்து, 14 பேர் நேற்று மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment