Thursday, June 6, 2013

பொதுநலவாய மாநாட்டுக்கு நியூசிலாந்து பூரண ஒத்துழைப்பு! New Zealand reaffirms support for CHOGM!

Thursday, June 06, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவூள்ள பொது நலவாய நாடுகளின் மாநாடு சிறப்பாக நடைபெற நியூசிலாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கும் என தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மெக்கலி உறுதியளித்தார்.

அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று  அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த உறுதிமொழியை வழங்கினார். மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற தாம் வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை உலகத்  தலைவர்கள் நேரி;ல் காணக்கூடிய ஒரு வாய்ப்பை இந்த மாநாடு வழங்கும் என்றும் தமது நாட்டில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான வர்த்தகக் குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் என்றும் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி- இலங்;கையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 80 சதவீதம் வடக்குப் பிரதேச அபிவிருத்திக்கே பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் விவசாயம் மற்றும் உல்லாசப் பிரயாண விமானப் போக்குவரத்து துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் - ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
 
வெளிவிவகார அமைச்சர் மெக்யூலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கலாச்சாரம், விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் கல்வி போன்ற துறைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
மாதிரி பண்ணைகளை இலங்கையில் உருவாக்குவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் நியூசிலாந்து இணக்கம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment