Monday, June 17, 2013

இந்திய மத்திய அரசு தமிழ்க் கூட்டமைப்பைப் பயன்படுத்தி இங்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது: இந்தியா அல்லது மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் இலங்கை அரசு என்றும் தலையிடுவதில்லை: விமல் வீரவன்ஸ!

Monday, June 17, 2013
இலங்கை::அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவுக்கோ அல்லது வேறெந்த நாடுகளுக்கோ இலங்கை மீது அழுத்தம் கொடுக்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
 
இந்தியா அல்லது மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில், அல்லது அரசியல் பிரச்சினைகளில் இலங்கை அரசு என்றும் தலையிடுவதில்லை.
எமது நாட்டின் எமது அரசியலமைப்புக்கு எமக்குத் தேவையான திருத்தத்தை மேற்கொள்ள உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்திய மத்திய அரசு தமிழ்க் கூட்டமைப்பைப் பயன்படுத்தி இங்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. இந்தியா இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்ய முயற்சிப்பதை இது தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
 
கூட்டமைப்பு புலிகளின் பாராளுமன்றக் குழுவாகும்.
இந்தியா அக்குழுவின் தேவைக்கேற்ப செயற்படுகிறது.
இந்தியா புலிகளுடன் கொஞ்சுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
ஜே. ஆர். கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முதலில் இந்தியாவே மீறியது. இலங்கை தரப்பினர் ஒப்பந்தத்தை எப்போதும் பாதுகாத்தனர்.
 
புதிய அரசமைப்புத் திருத்தம் அந்த ஒப்பந்தத்திலிருந்து தாவிச் செல்வதாகக் கூறுவது இந்திய அரசின் சாமான்ய தர்க்கம் அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்

No comments:

Post a Comment