Monday, June 17, 2013
இலங்கை::அன்று ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் வாயில் துப்பாக்கியை வைத்து கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக அமுலான 13வது திருத்தம் தொடர்பாக நாட்டினதும் நாட்டு மக்களினதும் சார்பில் மீண்டும் பரிசீலித்துப் பார்க்க வேண்டுமென தகவல், ஊடக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
13வது திருத்தம் இந்தியாவுக்கோ வைகோவுக்கோ, ஜெயலலிதாவுக்கோ தேவையான வகையில் அமுலாக்கப்படாதென்றும் அமைச்சர் தெரிவித்தார். மாத்தளை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் நிமல் ஜயவர்தனவின் ஏற்பாட்டில் கட்டார் நாட்டில் வேலை பெற்ற நூற் றுக்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியல் யாப்பே இங்கு காணப்பட வேண்டும். அது நாட்டக்கும் நாட்டு மக்க ளுக்குமாகத் திருத்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.
மாகாண சபை முறையில் பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றி பரிசீலிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. அது தொடர்பாக அரசு மேற்கொள்ளும் சகல தீர்மானங்களும் நாட்டு மக்களின் இறைமைக்கு தலைசாய்த்து மேற்கொள் ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்,,
மத்திய மாகாணசபை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கலைக்கப்படலாம்!

மத்திய மாகாணசபை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கலைக்கப்படக் கூடுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாகாணசபையை கலைப்பது தொடர்பான ஆவணங்களை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஏற்றகனவே ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவவிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் வட மத்திய மாகாணசபையும் கலைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய, வடமத்திய மற்றும் வட மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..

No comments:
Post a Comment