Thursday, June 27, 2013
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் வரைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் இந்த சந்திப்பின்போது கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஐக்கிய தேசிய கட்சியின் உத்தேச அரசியல் வரைவு கையளிக்கப்பட்டுள்ளது.
தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை மாற்று அரசாங்கமாக கருதுவதாகவும் முன்வைக்கப்பட்ட உத்தேச உத்தேச அரசியல் வரைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்கு பரிசீலித்து அது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்கும் என அமைச்சர் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.


No comments:
Post a Comment