Friday, June 28, 2013
இலங்கை::தான் இனிமேல் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட மாட்டேன் என ஒரு வருடம், வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்
இனி குற்றச் செயல்களில் ஈடுபடப் போவதில்லை என தமிழினி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட மாட்டேன்.
எதிர்காலத்தில் திருமண பந்தத்தில் இணைந்து நல்ல வாழ்க்கை ஒன்றைத் தொடர்வேன். கடந்த கால நினைவுகளை நான் அழித்துவிட்டேன்.
எனது தங்கையின் பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்வேன்.
தேவையில்லாதவற்றை தலையில் போட்டுக்கொள்ள மாட்டேன்.
எதிர்காலத்தில் நல்ல குடும்ப வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து சமூகத்திற்கு தொண்டாற்றுவேன்.
கடந்த ஓரு ஆண்டில் தியானம் செய்தேன். தற்போது நான் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றேன்.
இராணுவத்தினர் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளித்தனர்.
இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என தமிழினி தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment